உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விவசாயிக்கு மிரட்டல் இருவர் மீது வழக்கு

விவசாயிக்கு மிரட்டல் இருவர் மீது வழக்கு

விவசாயிக்கு மிரட்டல்இருவர் மீது வழக்கு ஊதியூர், : ஊதியூர் அருகே உள்ள ஆறுதொழுவு, காலிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வேலுச்சாமி, 53; இந்த கிராமத்தில் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்துள்ளனர். இரவில் டிப்பர் லாரிகளில் மண் எடுத்து செல்லும்போது, கால்நடைகள் மற்றும் சாலையோரத்தில் உள்ள பொருட்கள் மீது மோதியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வருவாய் துறையினருக்கு புகாரளித்தனர். இந்நிலையில் வேலுச்சாமி அவரது தோட்டத்துக்கு சென்றபோது, ராஜேஷ் மற்றும் காங்கேயத்தை சேர்ந்த செல்வராஜ், 40, இருவரும் வழிமறித்து, மண் எடுப்பது குறித்து புகார் தெரிவிக்கிறாயா? என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அவர் புகாரின் படி ஊதியூர் போலீசில் இருவர் மீதும், மூன்று பிரிவுகளில் வழங்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி