தேர்தல் விதிமுறை குறித்துபொது பார்வையாளர் ஆய்வு
தேர்தல் விதிமுறை குறித்துபொது பார்வையாளர் ஆய்வுஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக பொது பார்வையாளராக அஜய்குமார் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொறுப்பேற்ற அவர், மாநகராட்சி வளாகத்தில் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் ஊடக கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.'டிவி', நாளிதழ்கள், சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி, 'பெய்டு நியூஸ்' குறித்தும், அனுமதி பெற்று பிரசாரம் மேற்கொள்ளுதல், சி-விஜில் ஆப் மற்றும் புகார் எண்களில் பெறப்பட்ட புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து பறக்கும் படை குழுவினர், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன தணிக்கை, சோதனைகளில் ஈடுபடுவது பற்றி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் உடனிருந்தார்.