உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / முதல்வரிடம் திருப்பூர் எம்.பி., மனு

முதல்வரிடம் திருப்பூர் எம்.பி., மனு

முதல்வரிடம் திருப்பூர் எம்.பி., மனுஈரோடு,:நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பெருந்துறையுடன், கருமாண்டிசெல்லிபாளையத்தை இணைக்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினிடம், திருப்பூர் எம்.பி., சுப்பராயன் மனு வழங்கினார்.அவரது மனுவில் கூறியதாவது: அந்தியூர், பவானி விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான, தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பெருந்துறையுடன், கருமாண்டிசெல்லிபாளையம் டவுன் பஞ்சாயத்தை இணைக்க வேண்டும். கோபியில் தியாகி லட்சுமண ஐயருக்கு வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்க வேண்டும். ஆஷா பணியாளர்களுக்கு மாதம், 20,000 ரூபாய் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !