கண்காட்சியில் சிறந்த படைப்புமாணவ, மாணவியருக்கு பரிசு
கண்காட்சியில் சிறந்த படைப்புமாணவ, மாணவியருக்கு பரிசுசென்னிமலை:தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு கண்காட்சி, சென்னிமலையில் ஆறு நாட்கள் நடந்தது. கண்காட்சியில் சென்னிமலை சுற்று வட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 250 மாணவ, மாணவியர் தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்தனர். இதில் சிறந்த படைப்புகளை வைத்த பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, காங்கேயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., விடியல் சேகர், பரிசளித்து பாராட்டினார். நிகழ்வில் கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் துரைசாமி, செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மூத்த வழக்கறிஞர் சிதம்பரம், கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி இயக்குனர் நாகராஜ், சென்னிமலை கொங்கு இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் கந்தசாமி, ஸ்ரீஜெய் விகாஷ் பள்ளி இயக்குனர் நந்தினி கலந்து கொண்டனர்.