மேலும் செய்திகள்
ஹோட்டல் உரிமையாளர் தற்கொலை
30-Jan-2025
மொடக்குறிச்சி அருகே இரவில்பெண்ணிடம் தாலி பறிப்புஈரோடு:மொடக்குறிச்சி அருகே இரவில் பெண்ணிடம் தாலி பறித்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.மொடக்குறிச்சி, சின்னியம்பாளையம், கணபதி நகரை சேர்ந்த மகேந்திரன் மனைவி காஞ்சனா, 58; இவர்களின் மகள் சந்தியா. திருமணமாகி கணவருடன் மொடக்குறிச்சியில் வசிக்கிறார். மகளை நேற்று முன்தினம் பார்த்துவிட்டு, அரசு பஸ்சில் இரவில் சின்னியம்பாளையம் வந்தார். பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு காஞ்சனா நடந்து சென்றார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த ஆசாமி, காஞ்சனா அணிந்திருந்த நான்கு பவுன் தாலிக்கொடியை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட காஞ்சனா, தாலியை இறுகப்பிடித்து கொண்டார். ஆனாலும் ஹெல்மெட் கொள்ளையன் தீவிரமாக முயற்சித்து இழுத்ததில், தாலி அறுந்து ஒரு பவுன் மதிப்பிலான நகை அவனிடம் செல்லவே ஆசாமி பறந்து விட்டான். காஞ்சனா புகாரின்படி மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
30-Jan-2025