உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரச்சந்தைக்கு கிடைத்தது தொடர் மின் இணைப்பு

வாரச்சந்தைக்கு கிடைத்தது தொடர் மின் இணைப்பு

வாரச்சந்தைக்கு கிடைத்தது தொடர் மின் இணைப்புகோபி:கோபி நகராட்சி சார்பில், கூடாரத்துடன் கூடிய வாரச்சந்தை, 2024 ஜூலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. சனிக்கிழமை தோறும், 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். கூடாரத்துக்குள், தொடர்ச்சியாக மின் இணைப்பு வழங்காததால், எலக்ட்ரானிக் தராசுக்கு சார்ஜ் போட வழியின்றி வியாபாரிகள் அவதியுற்றனர். கூடாரத்தின் பக்கவாட்டில் உள்ள தகர சீட்டால், காற்றோட்டமின்றி அமர்ந்திருக்க முடியாமல் அவதியுறுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக அனைத்து சுவிட்ச் பாக்சுக்கும், நேற்று தொடர்ச்சியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம், பக்கவாட்டில் உள்ள தகரசீட்டுகளை காற்றோட்ட வசதிக்காக இன்னும் அகற்றப்படவில்லை. அதற்கு பதிலாக கூடாரத்தின் மேல் பகுதியில், எக்சாஸ்ட் பேன்கள் பொருத்த, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை