உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குப்பை தொட்டிக்கு தீ; புகையால் அவதி

குப்பை தொட்டிக்கு தீ; புகையால் அவதி

குப்பை தொட்டிக்கு தீ; புகையால் அவதிஈரோடு:ஈரோடு மாநகராட்சி முதலாவது வார்டுக்கு உட்பட்ட ராயபாளையத்தில், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இந்த குப்பைத் தொட்டி தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இப்பகுதியில் தினசரி இரவில் மர்ம நபர்கள் குப்பைத் தொட்டிக்கு தீ வைக்கின்றனர். இதனால் மாநகராட்சி துாய்மை பணியாளர்களால் தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்ற முடிவதில்லை. தீ வைப்பதால் ஏற்படும் புகையால் இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. குப்பை தொட்டியும் எரிந்து சேதமடைந்து வருகிறது. வழக்கத்துக்கு மாறாக நேற்று பகலிலேயே தீ வைத்துள்ளனர். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை