உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீரக்குமாரசாமி கோவிலில் நிலை சேர்ந்த தேர்

வீரக்குமாரசாமி கோவிலில் நிலை சேர்ந்த தேர்

வீரக்குமாரசாமி கோவிலில் நிலை சேர்ந்த தேர்காங்கேயம்:வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவிலில், 142வது மாசி மகா சிவராத்திரி தேர்த்திருவிழா கடந்த பிப்., 10ம் தேதி தொடங்கியது. கடந்த, 27ம் தேதி மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். முதல் நாளில் விநாயகர் கோவில் அருகே தேர் நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் இரண்டாம் நாள் தேரோட்டம் நடந்தது. மூன்றாவது நாளாக நேற்று மாலை, பக்தர்களால் இழுக்கப்பட்டு தேர் நிலையை அடைந்தது. ஆயிரக்கணக்காக பக்தர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மண்டப கட்டளை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை