உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாடியில் இருந்து குதித்தகல்லுாரி மாணவர் பலி

மாடியில் இருந்து குதித்தகல்லுாரி மாணவர் பலி

மாடியில் இருந்து குதித்தகல்லுாரி மாணவர் பலிஈரோடு:ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்த ரபீக்--ராபியா தம்பதி மகன் முகமது யூனுாஸ், 19; பி.டெக்., அக்ரி இரண்டாமாண்டு மாணவர். ஆன்லைன் வர்த்தகமும் செய்து வந்தார். இதற்காக தாய் ராபியாவிடம் பணம் கேட்டுள்ளார். தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் பெற்று, 37 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். இதை ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த யூனுாஸ் மீண்டும் பணம் கேட்க தாய் மறுத்துள்ளார். இதனால் கடந்த மாதம், 28ம்தேதி இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயத்துடன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்தார். கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ