உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு மருத்துவமனையில் கூடுதல்பணியாளர்களை நியமிக்க வேண்டும்

அரசு மருத்துவமனையில் கூடுதல்பணியாளர்களை நியமிக்க வேண்டும்

'அரசு மருத்துவமனையில் கூடுதல்பணியாளர்களை நியமிக்க வேண்டும்'ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஈரோடு மாவட்ட மருத்துவ துறை பணியாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி உள்ளிட்டோர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மருத்துவ கல்லுாரி, செவிலியர் பயிற்சி பள்ளியில், 157 துாய்மை பணியாளர்கள், 37 பாதுகாவலர் பணியாளர்கள், 7 மேற்பார்வையாளர்கள் அவுட் சோர்சிங் முறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கின்றனர். கொரோனா காலத்திலும், அதன் பின்னும் கட்டடம், மருத்துவமனையின் படுக்கை வசதிகள், புதிய பிரிவுகள் என உருவானதால், நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தேவைக்கு ஏற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். வேலைப்பளுவை குறைக்க, 400 பணியாளர்களை நியமிக்க வேண்டும்.அதுபோல, ஈரோடு அரசு மருத்துவமனையில், 131 பணியாளர்கள் உள்ளதை, 300 என அதிகரிக்க வேண்டும். 'கிரிஸ்டல், க்யூ.பி.எம்.எஸ்., என்ற ஒப்பந்த நிறுவனம் மூலம், இவர்கள் பணி செய்கின்றனர். இவர்கள் கலெக்டர் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச கூலியை வழங்கவில்லை என்பதுடன், கூடுதல் பணிச்சுமையை வழங்குகின்றனர். இதனால் வேலை நிறுத்தம், போராட்டத்துக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டு, தொழிலாளர் துறை பேச்சுவார்த்தை தொடர்கிறது. எனவே, இதுபற்றி, கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை