உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்

வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்

வாய்க்கால் துார்வாரும் பணி தீவிரம்அந்தியூர்:அந்தியூர் அருகேயுள்ள, வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, பாசனத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது.அந்தியூர், வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து கடந்த, 9ம் தேதி புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம், 3,000 ஏக்கர் நேரடியாகவும், 2,000 ஏக்கர் மறைமுகமாகவும் பயன் பெறுகின்றன. 100 நாட்களுக்கு திறக்கப்பட்ட தண்ணீர், மூன்று வாய்க்கால் மூலம் பாசனத்துக்கு செல்கிறது. மூன்று வாய்க்கால்களிலும், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முதல் வாய்க்காலில் தண்ணீர் சென்று வரும் நிலையில், இரண்டாவது வாய்க்காலில் நாளை வெளியேற்றப்படுகிறது.இதற்காக, புதுக்காடு பகுதியிலிருந்து, 7 கி.மீ., தொலைவிலான வாய்க்காலை துார்வாரும் பணி நேற்று நடந்தது. ஏற்கனவே, முதல் மற்றும் மூன்றாவது வாய்க்காலில் துார்வாரும் பணி நிறைவடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை