விட்டமின்-ஏ திரவம் நாளை முதல் வழங்கல்
'விட்டமின்-ஏ திரவம்' நாளை முதல் வழங்கல்ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 'விட்டமின்-ஏ திரவம்' வழங்கும் முகாம் நாளை தொடங்குகிறது. மாவட்டத்தில் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து, 30,956 குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்களில் திரவம் வழங்கப்படுகிறது. தேசிய அளவில் 'விட்டமின்-ஏ' குறைபாடு உள்ளவர்கள், 17.54 சதவீதம். தமிழகத்தில், 7 சதவீதமாகும். நாளை தொடங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதில், ௧௯ம் தேதி மட்டும் நடக்காது.