நெற்பயிரில் அதிக மகசூல் பெறபழங்குடியின மக்களுக்கு உபகரணம்
நெற்பயிரில் அதிக மகசூல் பெறபழங்குடியின மக்களுக்கு உபகரணம்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டியில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நெல்பயிரில் அதிக மகசூல் பெற, பழங்குடியின விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது. கொல்லிமலை, போதமலை பகுதியை சேர்ந்த பழங்குடியின விவசாயிகள் கலந்துகொண்டனர்.ஐதராபாத் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி முத்துராமன், காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் புஷ்பராஜ், கல்லுாரியின் வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கத்துறை பேராசிரியர்- தலைவர் பார்த்தசாரதி, வேளாண் பொருளியல் பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், 100 பழங்குடியின விவசாயிகளுக்கு, மின்கல தெளிப்பான், பேரல், தார்ப்பாய் ஆகிய வேளாண் உபகரணங்களை வழங்கினர். முன்னதாக, மத்திய அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்கள் குறித்து விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள் ஆகியோர் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். கொல்லிமலை, போதமலை பகுதியில் உள்ள பழங்குடியின விவசாயிகளுக்கு அதிக பரப்பளவில் வேளாண் பயிர்களை சாகுபடி செய்து மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறினர். மேலும், அந்தந்த பகுதிகளில் விவசாயிகள் உழவர் குழுக்களை உருவாக்கி வேளாண் இயந்திரங்களை வாங்கி பயன்படுத்தி, இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என, கேட்டுக்கொண்டனர். பா.ஜ., மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.***************************