வே.பாளையம் மருத்துவமனையில் டி.என்.பி.எல்., சார்பில் குடிநீர் வசதி
வே.பாளையம் மருத்துவமனையில் டி.என்.பி.எல்., சார்பில் குடிநீர் வசதிகரூர்:வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் சார்பில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் குடிநீர் வசதியை துவக்கி வைத்தார். டி.என்.பி.எல்., நிறுவனம் புகழூர் நகராட்சி, புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., வேட்டமங்கலம், புன்னம், கோம்புப்பாளையம், நஞ்சைப்புகழூர் மற்றும் திருக்காடுதுறை ஆகிய பஞ்., பகுதிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்திடவும், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள், தளவாட பொருட்கள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் மக்களின் பயன்பாட்டிற்காக, 95 ஆயிரம் ரூபாய்- மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அமைத்து தரப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில், வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.