மேலும் செய்திகள்
அரவக்குறிச்சி விவசாயிகளுக்குபண்ணை பள்ளி வகுப்பு
22-Mar-2025
நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சிமேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சிஅரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே, வெஞ்சமாங்கூடலுார் பகுதியில், நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி பயிற்சி நடந்தது.அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பண்ணை பள்ளி, வெஞ்சமாங்கூடலுார் கீழ் பாகம் கிராமத்தில் நேற்று நடந்தது. அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா தலைமை வகித்து, வேளாண்மை துறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அக்ரி ஸ்டாக்கில் விவசாயிகள் பதிவு மேற்கொள்வதன் அவசியம் குறித்தும், இதில் விவசாயிகள் பதிவு வரும், 31 கடைசி நாள் என, மத்திய அரசு அறிவித்துள்ளதை விளக்கினார்.தனியார் கல்லுாரி உதவி பேராசிரியரான ஐயம்பெருமாள், கடலையில் ஏற்படும் பூச்சி தாக்குதல், அவைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். பூச்சி மேலாண்மையில் சோலார் விளக்கு பொறி, இன கவர்ச்சி பொறி, மஞ்சள் வண்ண அட்டை கொண்டு எவ்வாறு பூச்சிகளை கவர்வது என்று விவசாயிகளுக்கு, வயல் வெளியில் பூச்சி தாக்குதல்களை காண்பித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தினார்.பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைந்தது என, விவசாயிகள் தெரிவித்தனர். 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் மதன், உதவி வேளாண்மை அலுவலர் நவநீதன் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
22-Mar-2025