உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குளத்தில் மீன் பிடித்த சிறுவன்நீரில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மீன் பிடித்த சிறுவன்நீரில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மீன் பிடித்த சிறுவன்நீரில் மூழ்கி உயிரிழப்புநம்பியூர்:-நம்பியூர் அடுத்த அப்பியாபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ், 43, பனியன் கம்பெனி தொழிலாளி. இவரது மகன் ரோகித், 13, இங்குள்ள அரசு பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், அதே பகுதியை சேர்ந்த சசிகுமார், ரித்தீஷ், ஹரிஹரசுதன் ஆகிய நண்பர்களுடன், ரோகித் மலையப்பாளையம் முருகன் கோவில் பகுதியில் உள்ள, தாமரை குளத்தில் குளித்து விட்டு மீன் பிடித்து வந்துள்ளனர். இதில் ரோஹித், சசிகுமார், ரித்திஷ், ஹரிஹரசுதன் நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாது.குளத்தில் நீண்ட நாட்களாக, தண்ணீர் தேங்கி நின்றதால் தாமரை செடிகள் பாசி பிடித்துள்ளது. இதில் கால் தவறி ரோஹித் நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த மற்ற மூவரும் கூச்சலிட்டனர். அருகில் ஆடு மேய்த்து கொண்டிருந்த பெண் ஒருவர், தான் கொண்டு வந்த துண்டை துாக்கி வீசி உள்ளார். அதை பிடித்த சசிகுமார், ரித்திஷ், ஹரிஹரசுதன் ஆகிய மூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நீரில் மூழ்கிய ரோகித் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.நம்பியூர் தீயணைப்பு துறை வீரர்கள், ரோகித் உடலை சடலமாக மீட்டனர். பள்ளி சிறுவன் விடுமுறை நாளில், 15 கி.மீ., தொலைவில் இருந்து பஸ் ஏறி, நண்பர்களுடன் குளிக்க வந்து உயிரிழந்தது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை