உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்ப் சட்ட திருத்த மசோதாவைகண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

வக்ப் சட்ட திருத்த மசோதாவைகண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

வக்ப் சட்ட திருத்த மசோதாவைகண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்ஈரோடு:மத்திய அரசு நிறைவேற்றிய வக்ப் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியதை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகம் சார்பில், ஈரோட்டில் கருங்கல்பாளையம் காந்தி சிலை முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.மசோதாவை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். இச்சட்ட திருத்தம் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு மாறாக அமைந்துள்ளது எனக்கூறி கோஷமிட்டனர். மாநகர் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் அக்கீம், பிற அமைப்பை சேர்ந்த லுக்மான், உமர்பரூக் உட்பட பலர் பேசினர். இதேபோல் த.வெ.க., சார்பில் பவானியில், அந்தியூர் கார்னரில், பவானி நகர செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. * அந்தியூரில் பர்கூர் ரோட்டில் பள்ளிவாசல் முன், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், வக்ப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை செயலாளர் ஷாநவாஸ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் முகமது ஷபி, அந்தியூர் நகர செயலாளர் இப்ராஹிம், நகர பொருளாளர் இப்ராஹிம், நகர அவைத் தலைவர் நஜீர் பாட்சா உள்பட பலர் கலந்து கொண்டனர்.* திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நடிகர் விஜயுடன், கில்லி உள்பட பல படங்களில் இணைந்து நடித்த சாப்ளின் பாலுவும் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை