ஆரம்ப நிலை மைய குழந்தைகள் கல்வி சுற்றுலா
ஆரம்ப நிலை மையகுழந்தைகள் கல்வி சுற்றுலாஈரோடு, ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், ஆரம்ப நிலை மைய குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள், ஒரு நாள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். சுற்றுலா பயண வாகனத்தை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து துவக்கி வைத்தார். அக்குழந்தைகளுக்கு தேவையான குடிநீர், பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பொருள் வழங்கப்பட்டது. கொங்கு அறிவாலயம் சிறப்பு பள்ளி, அரிமா சிறப்பு பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறன் குழந்தைகள், சிறப்பாசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர் என, 55 பேர் பங்கேற்றனர். பவானிசாகர் அணை பூங்கா சென்று, கற்றல் தொடர்பான பயிற்சி வழங்குகின்றனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.