உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தைப்பூச தேரோட்ட விழா: 800 பேருக்குஇலவச தியான, யோகா பயிற்சி வழங்கல்

தைப்பூச தேரோட்ட விழா: 800 பேருக்குஇலவச தியான, யோகா பயிற்சி வழங்கல்

தைப்பூச தேரோட்ட விழா: 800 பேருக்குஇலவச தியான, யோகா பயிற்சி வழங்கல்காங்கேயம்:-காங்கேயம் ஹார்ட் புல்னஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திய கலாசார அமைச்சகம் இணைந்து, யோக மஹோத்சவம் நிகழ்ச்சியை நடத்தியது. திருப்பூர் மாவட்டம், சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழாவில், படியூர் சர்வோதய சங்க சிவன்மலை கிளை வளாகத்தில் கடந்த, 11ம் தேதி முதல் மூன்று நாட்கள் வரை இலவச தியான, யோகா பயிற்சி நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவருக்கும், உடல் ஆரோக்கியத்திற்கான எளிமையான யோக பயிற்சி, பய உணர்வு, பதட்டம், மன இறுக்கம், எதிர்மறை சிந்தனைகள், குழப்பம் போன்ற மன ரீதியான பிரச்னைகளில் இருந்து விடுபடவும், மன நிறைவுடன், மன அமைதியுடன் வாழவும், வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளையும் திறம்பட கையாளும் எளிமையான ஓய்வு நிலை பயிற்சி, யோகா பிரணாஹீதியுடன் கூடிய தியான பயிற்சி இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் செந்தில்குமார், டி.வி. விஸ்வநாத ராவ் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இதில், 15 பயிற்சி ஆசிரியர்கள், 50 தன்னார்வ தொண்டர்கள் பயிற்சி அளித்தனர். 800க்கும் மேற்பட்டோர் பயிற்சியில் பலனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !