மனைவி மாயம்; கணவன் புகார்
கோபி: கோபி அருகே பா.வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் கோபா-லகிருஷ்ணன், 41. ஆட்டோ டிரைவர்; இவரின் மனைவி தேவி, 40; கடந்த, 15ம் தேதி பண்ணாரி கோவிலுக்கு சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவி-னர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. கோபாலகி-ருஷ்ணன் புகாரின்படி, கோபி போலீசார் தேடி வருகின்றனர்.