மேலும் செய்திகள்
கட்டடத்தை காணோம்: விவசாயிகள் புகாரால் பரபரப்பு
22-Dec-2024
ஈரோடு, :ஈரோட்டில் ஆபத்தான பழைய கட்டடத்தை, மாநகராட்சி நிர்வாகம் இடித்து அகற்றியது.ஈரோட்டில் மேட்டூர் சாலையில் தனியார் இடத்தில், 1970ல் கட்டடம் கட்டப்பட்டது. இடத்தின் உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் வாடகை தொடர்பாக பிரச்னை இருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இடத்தின் உரிமையாளர் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் கட்டடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. மாநகராட்சி சார்பில், சித்தோடு ஐ.ஆர்.டி.டி., பொறியியல் கல்லுாரி பிரிவு வல்லுனர்கள் கட்டடத்தை ஆய்வு செய்தனர். இதில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் ஆபத்தாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கட்டடத்தில் வாடகைக்கு இயங்கி வரும் இரு கடைகளின் உரிமையாளர்களை அகற்றிக்கொள்ள மாநகராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆணையர் மனிஷ் உத்தரவின்பேரில், உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம், இளநிலை பொறியாளர்கள் சுரன்சிங், சரவணன், உதவி நகர திட்டமிடுதல் கோவிந்தராஜன் முன்னிலையில் இரு பொக்லைன் மூலம் கட்டடம் நேற்று இடித்து அகற்றப்பட்டது.
22-Dec-2024