உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் பொது இடங்களில் பேனர்

சென்னிமலையில் பொது இடங்களில் பேனர்

சென்னிமலையில் பொது இடங்களில் பேனர்சென்னிமலை:சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில், உரிய அனுமதி இல்லாமல், பிளக்ஸ் பேனர் வைப்பது சமீப காலமாக அதிகரித்துள்ளது.வரும் பிப்.,3ம் தேதி சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச தேரோட்டம் தொடங்குகிறது. இதையொட்டி சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் அகற்ற, பேரூராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் செயல் அலுவலர் மகேந்திரன் கூறியதாவது: பேரூராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் தாங்களாகவே அகற்றி கொள்ள வேண்டும். அகற்றாத பட்சத்தில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றப்படும். இவ்வாறு கூறினார். இதேபோல் சென்னிமலை பகுதியில் மின் கம்பங்களிலும் பிளக்ஸ் பேனர் கட்டப்பட்டுள்ளது. இவற்றையும் மின்வாரியம் அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி