உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின்ஆபரண கண்காட்சி, விற்பனை

ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின்ஆபரண கண்காட்சி, விற்பனை

ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின்ஆபரண கண்காட்சி, விற்பனைதிருச்செங்கோடு: ஸ்ரீகுமரன் தங்க மாளிகையின் ஆபரண கண்காட்சி மற்றும் விற்பனை, திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே உள்ள ஹோட்டல் ராதா பிரசாத்-தில், நேற்று துவங்கியது.மூன்று நாட்களுக்கு நடக்கும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனையை சுரேஸ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஸ்பாபு மற்றும் கவுன்சிலர் மைதிலி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.இந்த கண்காட்சியில், திருமண நகைகளுக்கான பாம்பே ஆரம், நெக்லஸ், கல்கத்தா ஆரம், துபாய் ஆரம், கேரளா ஆரம், ட்ரெடிஷனல் ஆரம், முகப்பு செயின் கலெக்ஷன்கள், வளையல் கலெக்ஷன்கள், டயமண்ட் கலெக்ஷன்கள், ஹால்மார்க் வெள்ளியில் திருமண சீர்வரிசை செட்கள், பூஜை பொருட்களுக்கென ஸ்பெஷல் கலெக்ஷன்கள், புத்தம் புதிய டிசைன்கள் மாநகரில் வேறெங்கும் இல்லாத வகையில், விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என, அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி