உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை தேனீ கடித்து தொழிலாளி பலி

மலை தேனீ கடித்து தொழிலாளி பலி

மலை தேனீ கடித்து தொழிலாளி பலிபவானி:சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி, 48; திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனர். மீன் கடை கூலி தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் உள்ளது. தனது நண்பருடன் கோனேரிப்பட்டி பிரிவு அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று மதியம் முத்துசாமி சென்றார். அங்கு மது வாங்கிய இருவரும், சிறிது துாரத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து மகு குடித்துள்ளனர். அப்போது எங்கிருந்தோ வந்த மலை தேனீக்கள், சரமாரியாக முத்துச்சாமியை கொட்டியுள்ளன. இதில் மயங்கியவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ