மருத்துவ கல்லுாரி ஊழியர்தம்பதி வீட்டில் திருட்டு
மருத்துவ கல்லுாரி ஊழியர்தம்பதி வீட்டில் திருட்டுபெருந்துறை:பெருந்துறையை அடுத்த துடுப்பதி, அன்பு நகரை சேர்ந்தவர் சந்திரமோகன், 44; இவரின் மனைவி கவிதா, 42.; இருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள். நேற்று வழக்கம்போல் தம்பதியர் வேலைக்கும், மகன் கல்லுாரி, மகள் பள்ளிக்கு சென்று விட்டனர். மாலையில் சந்திரமோகன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த இரண்டரை பவுன் நெக்லஸ், கால் பவுன் தோடு, 20,000 ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.