உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபி தீயணைப்பு நிலையஅலுவலருக்கு பல்சர் பைக்

கோபி தீயணைப்பு நிலையஅலுவலருக்கு பல்சர் பைக்

கோபி தீயணைப்பு நிலையஅலுவலருக்கு பல்சர் பைக்கோபி:கோபி தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் உள்பட, 15 பேர் பணிபுரிகின்றனர். தீ விபத்து மற்றும் பிற மீட்பு அழைப்புகளுக்கு, தீயணைப்பு வீரர்களுடன் அதற்கான வாகனத்தில், நிலைய அலுவலர் பயணிக்கிறார். தவிர கட்டட உரிமம், தடையின்மை சான்று உள்ளிட்ட விசாரணைக்கு, நிலைய அலுவலர் எளிதாக செல்ல வசதியாக, தமிழகத்தில் உள்ள, 50 தீயணைப்பு நிலையங்களுக்கு, சமீபத்தில் பல்சர் பைக் வழங்கப்பட்ட. ஈரோடு மாவட்டத்தில் கோபி தீயணைப்பு நிலையத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ