புதிய கடனுதவி திட்டத்தில் ரூ.20 லட்சம் கடன் பெறலாம்
ஈரோடு, அக். 20-தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தாய்கோ வங்கி கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு, 8 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய் வரை புதிய திட்டமான, கலைஞர் கடன் உதவி திட்டத்தில் நடைமுறை மற்றும் மூலதன கடன் பெறலாம்.குறு உற்பத்தி நிறுவனங்கள், அசையா சொத்தை அடமானம் வைத்து பெறலாம். 18 முதல், 65 வயதுக்கு குறையாமல் இருக்க வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்கள் பயன் பெறலாம். தொழில் கூட்டுறவு அமைப்புகள் சார்ந்த குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பயன் பெறலாம்.ஏற்கனவே தொழில் செய்வோர், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடனை, விதிகளுக்கு உட்பட்டு இத்திட்டத்தில் குறைந்த வட்டிக்கு மாற்றலாம்.ஈரோடு மாவட்டத்தில் அதிக சந்தை வாய்ப்புள்ள, ஜவுளி, ஜவுளி சார்ந்த தொழில், விவசாயம் சார்ந்த தொழில், தேங்காய் நார் மற்றும் தொடர்புடைய தொழில், பிளாஸ்டிக் பொருள் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களுக்கு கடன் பெறலாம். கூடுதல் விபரத்துக்கு தாய்கோ வங்கி, மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்.