மேலும் செய்திகள்
இடைத்தேர்தல் பணியில் 1,194 அலுவலர் நியமனம்
13-Jan-2025
ஓட்டுச்சாவடிகளில் கேமராவரும் 27ல் பணி துவக்கம் ஈரோடு:ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி ஓட்டுச்சாவடிகளில் வரும், 27 முதல் கேமரா பொருத்தும் பணி நடைபெறும் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிப்., 5ல் நடக்கிறது. தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொகுதியில் ஒரு லட்சத்து, 9,636 ஆண்கள், ஒரு லட்சத்து, 16 ஆயிரத்து, 760 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள், 37 பேர் என மொத்தம், இரண்டு லட்சத்து, 26 ஆயிரத்து, 433 வாக்காளர்கள் உள்ளனர். 53 இடங்களில், 237 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. பி.பெ.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, மகாஜன பள்ளி பகுதி ஆகிய நான்கு இடங்களில் ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணிக்கான ஆயத்த வேலைகள் நடந்து வருகிறது. இதுபற்றி மாநகராட்சி அலுவலர்கள் கூறுகையில்,' பதட்டமானவை என கண்டறியப்பட்ட, ஒன்பது ஓட்டுச்சாவடிகளில் தலா இரண்டு, மீதமுள்ள ஓட்டுச்சாவடிகளில் தலா ஒன்று என 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. 237 ஓட்டுச்சாவடிகளிலும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். இவற்றை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேமரா அமைக்கும் பணி வரும், 27ல் துவங்கும்,' என்றனர்.
13-Jan-2025