உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ-நாம்ல் ரூ.91.33 கோடிக்கு விளைபொருள் விற்பனை

இ-நாம்ல் ரூ.91.33 கோடிக்கு விளைபொருள் விற்பனை

'இ-நாம்'ல் ரூ.91.33 கோடிக்கு விளைபொருள் விற்பனைஈரோடு, :ஈரோடு மாவட்ட விற்பனை குழு மூலம், 'இ-நாம்' திட்டத்தில், 12,850 டன் விளை பொருட்கள், 91.33 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஈரோடு விற்பனை குழு மூலம் மாவட்டத்தில் ஈரோடு, பூதப்பாடி, அந்தியூர், அவல்பூந்துறை, பவானி, கோபி, கொடுமுடி, பெருந்துறை, புளியம்பட்டி, சத்தி, சிவகிரி, தாளவாடி, வெள்ளாங்கோவில், எழுமாத்துார் என, 14 இடங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்படுகிறது. இங்கு தேங்காய், கொப்பரை தேங்காய், எள், நிலக்கடலை, வாழைத்தார், பருத்தி, மஞ்சள், பாக்கு, மக்காசோளம், பச்சை பயறு, தட்டை பயறு, உளுந்து, நரிப்பயிறு உட்பட பல்வேறு விளை பொருட்கள் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் விவசாயிகளுக்கு மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் (இ-நாம்) விளை பொருட்களுக்கான தொகை வழங்கப்படுவதால், விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுகின்றனர். இடைத்தரகர், கமிஷன் இல்லாததால், முழு தொகையும் கிடைக்கிறது.இதன்படி கடந்த ஏப்., 1 முதல், டிச., இறுதி வரையிலான காலத்தில், 'இ-நாம்' முறையில், 14 ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், 12,850 டன் விளை பொருட்கள் வரத்தாகி விற்றுள்ளது. இவற்றின் விற்பனை மதிப்பு, 91.33 கோடி ரூபாயாகும்.இதில் ஒரே விளை நிலத்தில் அதிக விளைச்சல் அல்லது அருகருகே விளை பொருட்கள் அதிகமாக விளைந்தால், 'பண்ணை வயல் வர்த்தகம்' திட்டத்தில், அவர்களது விளை நிலத்துக்கே சென்று விளை பொருளை கொள்முதல் செய்கின்றனர்.இம்முறையால் போக்குவரத்து செலவு, கால விரயம் தவிர்க்கப்படுகிறது.இம்முறையில், 1,938 கிலோ எடை கொண்ட விளை பொருட்கள், 7.50 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் விற்பனை குழுவுக்கான கிடங்கில் விளை பொருட்களை இருப்பு வைத்து, அப்பொருளின் மீது பொருளீட்டு கடன் வங்கியில் பெறலாம்.இவ்வாறாக, 4,184 டன் விளை பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, 2.81 கோடி ரூபாய் பொருளீட்டு கடனாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை