உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தரக்கோரி முறையீடு

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு தரக்கோரி முறையீடு

காங்கேயம்: காங்கேயம் தாலுகா வட்டமலை கிராமம், வடக்கு புதுப்பாளையத் தில், அரசு இலவசமாக தந்த இடத்தில் இரண்டு தலைமுறையாக வசித்து வந்த பூர்வகுடி மக்களை, குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றி, நிலத்தை அபகரித்துள்ளனர். அந்த குடியிருப்புக ளுக்கு வீட்டு எண், வீட்டு வரி, பட்டா, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என அனைத்தும் அந்த பகுதியை சார்ந்தே வைத்துள்ளனர். குடியி ருப்புகளை அபகரித்த வர்கள், 2015ம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு வீடுகளாக இடித்துள்ளனர். கோவில், மயானம், கிணறு, கழிப்பிடம் என அனைத்தையும் இடித்து தற்போது நிலத்தை சுற்றிலும் கம்பி வேலி போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இஅதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும், உரிய நடவடிக்கை எடுத்து, நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சார்பில், வட்டமலை பகுதியில், 25 பேர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நில ஆக்கிரமிப்பு குறித்து பல முறை கலெக்டர், ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தாரிடம் மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் கிழக்கு மாவட்ட தலைவர் காளிமுத்து தலைமையில், காங்கேயம் தாலுகா அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு, தாசில்தார் மயில்சாமியிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை