மின்வாரிய போட்டிமாணவர்களுக்கு பரிசு
மின்வாரிய போட்டிமாணவர்களுக்கு பரிசுஈரோடு:தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளிகளில் ஆற்றல் மன்றம் மூலம் மின் சேமிப்பு, மின் ஆற்றல், மின் பாதுகாப்பு என்ற தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள்-4, அரசு உயர்நிலைப்பள்ளிகள்-8, அரசு மேல்நிலைப்பள்ளிகள்-19 என, 31 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. செயற்பொறியாளர் மரியா ஆரோக்கியம் தலைமை பரிசுவழங்கினார்.