உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் கேம்ப் ஆபீஸ்

கொடிவேரியில் கேம்ப் ஆபீஸ்

கொடிவேரியில் 'கேம்ப் ஆபீஸ்' கோபி,:பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கு தலைமதகுடன், தடப்பள்ளி வாய்க்காலுக்கு ஆறு ஷட்டர், அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு ஐந்து ஷட்டர் உள்ளது. பலத்த மழைக்காலங்களில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது தலைமதகு கட்டமைப்புக்குள் தண்ணீர் கடல்போல் தேங்கி நிற்கும். இதுபோன்ற சமயங்களில் அவசரகால நடவடிக்கையாக, மதகு மற்றும் கொடிவேரி தடுப்பணையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறை இல்லை.இந்த குறையை போக்கும் வகையில், மின் மோட்டாருக்கான கட்டுப்பாட்டு அறையின் ஒரு பகுதியை, நீர்வள ஆதாரத்துறையினர் முகாம் அலுவலகமாக (கேம்ப் ஆபீஸ்) மாற்றியுள்ளனர். பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்படும் சமயங்களில், இதனால் உதவியாக இருக்கும் என நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி