உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா

அரசு தொடக்கப்பள்ளி நுாற்றாண்டு விழா டி.என்.பாளையம்டி.என்.பாளையம் ஒன்றியம் பங்களாப்புதுார் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி, 1924ல் துவங்கப்பட்டது. இந்நிலையில் பள்ளியின் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.இதையொட்டி முன்னாள் மாணவர்கள், பள்ளிக்கு தேவையான விளையாட்டு சீருடை, நோட்டு புத்தகங்கள், எல்.இ.டி., டிவி, இருக்கை, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கல்வி சீர் வரிசையாக, மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து நடந்த விழாவில் தலைமையாசிரியை சாந்தி வரவேற்றார். பள்ளி பி.டி.ஏ., தலைவர் ராமசந்திரன், நுாற்றாண்டு விழாச்சுடர் ஏற்றினார். முன்னாள் தலைமையாசிரியர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர்கள், மாணவ--மாணவியர், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், ஊர்துமக்கள் மற்றும் பல்வேறு துறை சிறப்பு விருந்தினர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ