உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் டிரைவர்கள் ஈரோட்டில் பேரணி

ரயில் டிரைவர்கள் ஈரோட்டில் பேரணி

ரயில் டிரைவர்கள் ஈரோட்டில் பேரணிஈரோடு:ஈரோட்டில், ரயில் டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர்.ரயில்வே துறையை தனியார் மயமாக்கத்தை நிறுத்த வேண்டும். தொடர் இரவு பணியை வழங்குவதை தவிர்க்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், நேற்று முன்தினம் கருத்தரங்கு நடந்தது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இரண்டாம் நாளாக நேற்று காலை, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கருத்தரங்கு நடக்கும் பகுதி வரை சங்கத்தினர் பேரணி சென்றனர். சேலம் கோட்ட தலைவர் அருண் குமார் தலைமை வகித்தார். சேலம் டிவிசன் தென்மண்டல தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தார். இதில் ரயில் டிரைவர்கள், உதவி டிரைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை