மேலும் செய்திகள்
நெல் கமிஷன் ஏஜன்ட் கடத்தல்
06-Mar-2025
பெண்ணிடம் மொபைல்பறித்த ஆசாமி கைதுதாராபுரம்:தாராபுரத்தை அடுத்த கவுண்டச்சிபுதுாரை சேர்ந்த தேவராஜ் மனைவி கலைச்செல்வி, 35; நேற்று முன்தினம் இரவு கவுண்டச்சிபுதுார் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது வந்த அடையாளம் தெரியாத வாலிபர், முகவரி கேட்பது போல் பேசி, அவர் வைத்திருந்த மொபைல்பனை பறித்து பைக்கில் பறந்தார். கலைச்செல்வி புகாரின்படி தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தாராபுரத்தில் நேற்று போலீஸ் ரோந்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில் கலைச்செல்வியிடம் மொபைல்போன் பறித்த ஆசாமி என்பது தெரிந்தது. விசாரணையில் அலங்கியத்தை சேர்ந்த கதிர்வேல் மகன் ஹரிஹரன், 20, என்பது தெரிந்தது. ஹரிஹரனை போலீசார் கைது செய்தனர்.
06-Mar-2025