உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் எம்.எல்.ஏ.,வுக்குதி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு

அந்தியூர் எம்.எல்.ஏ.,வுக்குதி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு

அந்தியூர் எம்.எல்.ஏ.,வுக்குதி.மு.க.,வினர் உற்சாக வரவேற்புஅந்தியூர்:அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு, 463 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டத்தை பெற்றுக் கொடுத்த எம்.எல்.ஏ.,வுக்கு தி.மு.க., வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.சட்டசபை கூட்டத்தொடரில், காவிரி யாற்றிலிருந்து அந்தியூர் தொகுதிக்கு, 374 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், 75 கோடி ரூபாயில், பி.மேட்டுப்பாளையம், அத்தாணி, கூகலுார் ஆகிய பேரூராட்சிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகள், எண்ணமங்கலம் அருகேயுள்ள குசலாம்பாறை பள்ளம் சீரமைத்தல், கணக்கம்பாளையம் செக் டேம் புதுப்பித்தல், தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கு, 12 கோடி ரூபாயும், அந்தியூர் வாரச்சந்தை மேம்பாட்டுக்கு, 2.50 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் ரவுண்டானா அருகில், சென்னையிலிருந்து வந்த எம்.எல்.ஏ., வெங்கடாசலத்துக்கு மேள தாளங்களுடன், பட்டாசு வெடித்து தி.மு.க.,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பேரூர் செயலாளர் காளிதாஸ், ஐடி விங்க் மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ