மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
27-Mar-2025
துாய்மை பணியாளர் குறைதீர் கூட்டம்தாராபுரம்:தாராபுரம் நகராட்சி அலுவலகத்தில், துாய்மை பணியாளர்களுக்கான குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது. தலைவர் பாப்புகண்ணன் தலைமை வகித்து குறை கேட்டறிந்தார். சுகாதார ஆய்வாளர்கள் மலைச்சாமி, சரவணபிரபு கலந்து கொண்டனர்.* ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று நடந்தது. துவரம் பருப்பு (கிலோ), குண்டு உளுந்து, பச்சை பயிர், தலா 130 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு, 140 ரூபாய்க்கும், தட்டைப்பயிர், 120, கொள்ளு, 80, கடலைப்பருப்பு, 110, கடுகு, 120, சீரகம், 380, மல்லி, 140, வெந்தயம், 120, பொட்டுக்கடலை, கருப்பு சுண்டல், தலா 100 ரூபாய்க்கும், வெள்ளை சுண்டல், 120, வரமிளகாய், 180, புளி, 240, பூண்டு ரூபாய்க்கும் விற்பனையானது. * அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 16,097 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 51.46 முதல், 66.99 ரூபாய் வரை, 6,039 கிலோ தேங்காய், 3.௪௯ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 2,200 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,280 முதல், 1,390 ரூபாய்; உருண்டை வெல்லம், 2,600 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 முதல், 1,380 ரூபாய்; அச்சு வெல்லம், 250 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,450 முதல், 1,450 ரூபாய் வரை விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் நாட்டு சர்க்கரை மற்றும் அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை உயர்ந்தது. உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் குறைந்தது.* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த எள் ஏலத்துக்கு, 1,521 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ கருப்பு ரகம், 121.62 முதல், 190.09 ரூபாய்; சிவப்பு ரகம் கிலோ, 115.23 முதல், 147.09 ரூபாய்; வெள்ளை ரகம், 135.43 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 1.௧௩ லட்சம் கிலோ எள், 1.௭௩ கோடி ரூபாய்க்கு விற்றது.* திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூட மையத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. மொத்தம், ௬3 மூட்டைகளில், 4,779 கிலோ வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 18௫ ரூபாய், குறைந்தபட்சம், 12௪ ரூபாய்க்கும் ஏலம் போனது. இதேபோல் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 2,784 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. ஒரு கிலோ அதிகபட்சம், 181.30 ரூபாய், குறைந்தபட்சம், 99.65 ரூபாய்க்கும் ஏலம் போனது.
27-Mar-2025