நீச்சல் பழகிய மாணவன் பலி
நீச்சல் பழகிய மாணவன் பலிதாராபுரம்:தாராபுரத்தை அடுத்த கன்னிவாடியை சேர்ந்தவர் ராகவேஸ்வரன், 17; தனியார் பள்ளியில் பிளஸ் ௨ தேர்வு எழுதி முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சில தினங்களாக தந்தை ஆனந்தகுமாருடன், அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் நீச்சல் பழக சென்று வந்தார். நேற்று தந்தை வெளியூர் சென்ற நிலையில், நீச்சல் பழகி விட்டதாக கருதிய ராகவேஸ்வரன், தனியாகவே சென்றுள்ளார். இந்நிலையில் நீரில் மூழ்கி பலியாகி விட்டார். மூலனுார் போலீசார் மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.