உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்சாரம் தாக்கி மயில் பலி

மின்சாரம் தாக்கி மயில் பலி

மின்சாரம் தாக்கி மயில் பலிஈரோடு: ஈரோடு, வெண்டிபாளையம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு மின் டிரான்ஸ்பார்மரில் ஆண் மயில் பறந்து வந்து உட்கார்ந்தது. அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. டிரான்ஸ்பார்மரிலும் தீப்பொறி கிளம்பியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தேசிய பறவையான மயிலுக்கு அப்பகுதி மக்கள், தேசியக்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர். அங்கு சென்ற வனத்துறையினர் மயில் உடலை பெற்று சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை