உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராம உதவியாளர் சங்கத்தினர்உண்ணாவிரத போராட்டம்

கிராம உதவியாளர் சங்கத்தினர்உண்ணாவிரத போராட்டம்

கிராம உதவியாளர் சங்கத்தினர்உண்ணாவிரத போராட்டம்ஈரோடு:ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பரமசிவம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் ராஜசேகர், கோரிக்கைகள் குறித்து பேசினார்.சி.பி.எஸ்., சந்தா இறுதி தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை-33ல் உரிய திருத்தம் வெளியிட்டு, கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரும் கோப்புக்கு விரைவாக ஒப்புதல் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், 15,700 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் வெங்கிடு, உஷாராணி, செந்தாமலர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி