முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், ஈரோட்டில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சுதாகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.பள்ளிக்கல்வித்துறைக்கு நடப்பாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் நடத்துவதற்கான உடனடியாக அறிவிப்பும், அட்டவணையும் வெளியிட வேண்டும். கல்விக்கூடங்களில் கலெக்டர், கல்வி சாரா அலுவலர்களின் தலையீடுகளையும், கண்ணியமற்ற பேச்சுக்களையும் முறைப்படுத்திட தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட வேண்டும்.100 சதவீத தேர்ச்சி குறைவிற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணம் என்ற வகையில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும். தவறிழைக்காத ஆசிரியர்கள் மீது போடப்படும் பல்வேறு வழக்குகள், நெறிபிறழ் நடத்தையுள்ள மாணவர்கள், பொதுமக்களிடம் இருந்து ஆசிரியர்களை பாதுகாத்திடும் வகையில் பணிப்பாதுகாப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.