சமுதாய வளப்பயிற்றுனராக விண்ணப்பம் வரவேற்பு
ஈரோடு :மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய, சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் என்ற துணை அமைப்பு, மாவட்ட அளவில் செயல்படும் உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதில், சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல், ஒருங்கிணைப்பு போன்ற சேவை வழங்கும் அமைப்பாகும். ஊரக பகுதியை சேர்ந்த மகளிர் குழு, அதுபோன்ற அமைப்பில் திறம் படைத்தவர்கள், இதற்கான பயிற்சி நடத்த விண்ணப்பிக்கலாம்.கைபேசி செயலி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். சமுதாய வளப்பயிற்றுனராக செயல்பட, குடும்ப ஒத்துழைப்பும் அவசியம். விருப்பம் உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சமுதாய வளப்பயிற்றுனரானால், நான் ஒன்றுக்கு மதிப்பூதியம், 750, 500, 350 ரூபாய் வழங்கப்படும். விண்ணப்ப படிவம், தகுதிகளை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்தில் அல்லது, www.erode.nic.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து வரும், 26 மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும்.