உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின்வாரிய பொறியாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

மின்வாரிய பொறியாளர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சார்பில் மண்டல செயலர் அரவிந்தகுமார் தலைமையில், 5ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர்.பழைய பென்ஷன் திட்டத்தை அமலாக்க வேண்டும். ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி உடன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இடைக்கால நிவாரணமாக, மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். 47,600 களப்பணி காலியிடங்களை ஐ.டி.ஐ., படித்தவர்கள் மூலம் நிரப்ப வேண்டும். முதற்கட்ட தேர்வு எழுதியவர்களில், 11,000 பேரை பணியமர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வெள்ளியங்கிரி, வரதராஜன், ஜெயசந்திரன் ஆகியோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை