குடிபோதை பழக்கத்தால் எலக்ட்ரீஷியன் தற்கொலை
பெருந்துறை, பெருந்துறை, ஆனந்த நகரை சேர்ந்தவர் குமார், 45, எலக்ட்ரீஷியன். இவர் மனைவி சுகுணா, 41; வெளிநாட்டில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். பெருந்துறையில் குழந்தைகளுடன் குமார் இருந்தார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி குழந்தைகளை சரி வர கவனிக்கவில்லை. இதையறிந்த சுகுணா, குழந்தைகளை தனது உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, வெளிநாடு சென்று விட்டார். குழந்தைகளை பார்க்க முடியாத ஏக்கத்தில், வீட்டில் நேற்று முன்தினம் இரவு குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.