உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

மாணவர்களுக்கு பயிற்சி ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் அரசு சார்ந்த ஊக்கத்தொகை பெறும் தேர்வுகளில் மாணவ,-மாணவியருக்கு சிறப்பாக பயிற்சி அளித்த, 983 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற மாணவ,-மாணவியர் ஊரக திறனாய்வு தேர்வு(டிரஸ்ட்), முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு (டி.என்.சி.எம்.டி.எஸ்.இ), தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவி திட்ட தேர்வு(என்.எம்.எம்.எஸ்), நீட், தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் சி.யு.இ.டி(க்யுட்) தேர்வு, திறன் தேர்வு என மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத்தொகைக்கான போட்டி தேர்வுகள், நுழைவு தேர்வுகளில், 2025--2026ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியை, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நேற்று ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி தலைமை வகித்து, 983 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ