நாய்களை கட்டுப்படுத்த ஆணையர் அறிவுறுத்தல்
ஈரோடு:விலங்குகள் இனப்பெருக்கம் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையர் அர்பித்ஜெயின் தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநகராட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை கண்டறிவது, ரேபிஸ் நோய் தடுப்பூசி போடுவது, தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்வது, கருத்தடை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கான மாற்று வழிகள் என்பன உட்பட பல்வேறு விஷயங்களை ஆலோசசித்து, பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. மாநகர நல அலுவலர் கவுரி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.