தாலுகா அலுவலகத்தில் 20 பவுன் நகை மாயம் தாசில்தார் புகாரில் கோபி போலீசார் விசாரணை
தாலுகா அலுவலகத்தில் 20 பவுன் நகை மாயம் தாசில்தார் புகாரில் கோபி போலீசார் விசாரணைகோபி: கோபி தாலுகா ஆபீசின் பீரோவில் இருந்த, 20 பவுன் நகைகள் திருட்டு போனது குறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அந்தியூர் தாலுகா அம்மாபேட்டை அருகே நெருஞ்சிபேட்டையை சேர்ந்தவர் சரவணன், 54; கடந்த, 2024 செப்.,16ம் தேதி முதல் கோபி தாசில்தாராக உள்ளார். கடந்த, 2019 டிச.,31ல் கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு ஒன்றில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய, 20 பவுன் நகைகளை, 2020ல் அப்போதைய மண்டல துணை தாசில்தார் உத்தரசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை சிறு தகர பெட்டியில் வைத்து, கோபி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்து, அதற்கான ரசீது அப்போதைய ஆர்.ஐ., குணப்பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த, 2024ல் அப்போதைய தலைமையிடத்து துணை தாசில்தார் விஜய சாமுண்டீஸ்வரி வசம் நகைப்பெட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் தாசில்தாராக பதவி உயர்வுடன் இடமாறுதலில் சென்றதால், அப்போதைய ஆர்.ஐ., இந்திராணியிடம் நகைப்பெட்டி ஒப்படைக்கப்பட்டது. தாலுகா அலுவலக பீரோவில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த மாதம், 30ல் நகை மாயமானது தெரிந்தது. கோபி தாசில்தார் சரவணன், கோபி போலீசில் புகாரளித்தார். இதன்படி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளநனர்.இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: திரும்ப திரும்ப ஒப்படைக்கும்போது, சார்நிலை கருவூலத்துக்கும், தாலுகா ஆபீசுக்கும் என இரு துறைக்கும் இடையே பெட்டி கைமாறியுள்ளது. அந்த பெட்டி கடைசியாக தாலுகா அலுவலக கட்டுப்பாட்டுக்கு வரும்போது, பெட்டியின் பூட்டின் மீது துணி சுற்றப்பட்டு சீலிடப்பட்டிருந்தது. பீரோவின் கைப்பிடி சாய்ந்த நிலையில் திறந்திருந்ததால், அதனுள் இருந்த பெட்டியை சந்தேகத்தில் திறந்து பார்த்தபோது, நகை மாயமாகி இருந்ததும், அதனுள் பாலிதீன் கவரும், துண்டு சீட்டு மட்டுமே இருந்தது தெரியவந்தது. இவ்வாறு கூறினர். இ.வி.எம்., பழுதுஈரோடு :ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் நேற்று எண்ணப்பட்டது.மெசாத்தம், 14 மேஜைகளில், 17 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. 6வது சுற்றின்போது, பெரியவலசு பகுதிக்கு உட்பட்ட, 71வது ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இயந்திரத்தில் பேட்டரிகளை மாற்றி பார்த்தும், செயல்படவில்லை. இதை தொடர்ந்து அந்த ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட 'வி.வி.பேட்'ல் பதிவான ஓட்டுச்சீட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.