உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வன அலுவலர் தாயாரிடம்5 பவுன் நகை கொள்ளை

வன அலுவலர் தாயாரிடம்5 பவுன் நகை கொள்ளை

வன அலுவலர் தாயாரிடம்5 பவுன் நகை கொள்ளைசென்னிமலை, :சென்னிமலை, முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனி அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்த ராசப்பன் மனைவி ஜெயமணி, 75; கணவர் இறந்து விட்ட நிலையில், தனியாக வசித்து வருகிறார். ஜெயமணி நேற்று மதியம் வீட்டு சோபாவில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்தபடி உள்ளே புகுந்த ஆசாமி, ஜெயமணி முகத்தில் மிளகாய் பொடி துாவி, அவர் போட்டிருந்த ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை பறித்து சென்று விட்டார். இதுகுறித்து ஜெயமணியின் மகனும், சத்தி அரசு சந்தன மரக்கிடங்கு வனச்சரக அலுவலருமான ராமசந்திரன், சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார். வீடு புகுந்து நகை பறித்த ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி