உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரே குடும்பத்தில் மூவருக்கு கத்திக்குத்து

ஒரே குடும்பத்தில் மூவருக்கு கத்திக்குத்து

அந்தியூர்: அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 31; இவரின் சகோதரி சித்ரா. கணவன் இறந்த நிலையில், இரண்டு மகன்களுடன் தனியாக வசித்தார். ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஞானசேகரனுடன் குடும்பம் நடத்தி வந்தார். கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்து, தாய் வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு சித்ரா வீட்டுக்கு வந்த ஞானசேகரன், குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர் கத்தியால் குத்தியதில் வெங்கடேஷ், அரசன், ரமாயி உள்பட மூவர் காயமடைந்தனர். இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை