உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்பெருந்துறை:பெருந்துறையில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி, பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவு வாயில் முன், பெருந்துறை வக்கீல் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பெருந்துறை வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.தலைவர் செந்தில்குமார் கூறுகையில், 'பெருந்துறையில் ஏற்கனவே புனரமைக்கப்பட்டு தயாராக உள்ள புராதன நீதிமன்ற கட்டடத்தில், கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தை தொடங்க வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், ஈரோடு மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞர்களை கண்டிக்கிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி